எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்.பி ஆர்.ராசாவைக் கண்டித்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் தேர்தலில் ராசாவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.
ஸ்பெய்னில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகச் சொல்லப்படும் 3 நிறுவனங்களும் தமிழகத்தைச் சேர்ந்தவை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காகவே நாடகம் போட்டுள்ளார் முதலமைச்சர் எனவும் விமர்சித்தார்.